இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை
" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்படிபிப்பு கடந்த பிப்ரவரி 19-ந் தேதி பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் இடத்தில் நடந்தபோது கிரேன் சாய்ந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தரராஜன் ஆகியோர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.




 

பின்னர். இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், தயாரிப்பு மேலாளர் சுந்தரராஜனை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். 




 

இதையடுத்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மீது பதிவான வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியவை ஆகும். எனவே, அவர் கீழ் கோர்ட்டை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையில், படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Popular posts
தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
Image
பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
Image
சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்
Image
மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை - ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image